பெரும்பான்மை இழந்த சிவசேனா : ஏக்னாத் ஷிண்டே அறிவிப்பு
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து விலகி, பாஜக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று திடீரென சிவசேனா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முக்கிய அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே கூறியதாக கூறப்படுகிறது.
பெரும்பானைமையில் ஷிண்டெ
இந்த நிலையில் ஷிண்டேவுக்கு ஆதரவாக சிவசேனாவைச் சேர்ந்த 40 எல்எல்ஏ-கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைக்க சிவசேனா கட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்தநிலையில் சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். மேலும் அவர் சிவசேனா சட்டமன்றகுழு தலைவராக அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.
அரசு பெரும்பான்மை இழந்து விட்டது
இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், மராட்டிய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்னாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். உச்ச நீதி மன்றத்தில் ஏக்னாத் ஷிண்டே தாக்கல் செய்த மனுவில், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சட்டசபையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி பெரும்பான்மையை இழந்து இருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மதியம் 2 மணிக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே அழைத்துள்ளார்.
பற்றி எரியும் வட மாநிலங்கள் .. கலவரமாகிறதா அக்னிபாத் திட்டம்? : பின்னணி என்ன ?