மோடி என்ன கிரிக்கெட் வீரரா? என்ன சாதித்தார் அவர்? - சிவசேனா சரமாரி கேள்வி
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருதின் பெயரை மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது என பெயர் மாற்றம் செய்து பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டாலும் இதுகுறித்து அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

அந்த கட்டுரையில் ராஜீவ் காந்தியின் தியாகங்களை அவமதிக்காமல் மேஜர் தயான் சந்த் கௌரவிக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்றதை இந்திய மக்கள் கொண்டாடும் நிலையில், மத்திய அரசு அரசியல் விளையாட்டு விளையாடுவதாகவும் காட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் பாஜகவில் உள்ள சிலர் ஹாக்கி விளையாட்டுக்கு ராஜீவ் காந்தி என்ன செய்தார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.அவர்கள் கேள்வி நியாயமானதுதான். அதேசமயம் அகமதாபாத்தில் சர்தார் படேல் மைதானத்தின் பெயரை நரேந்திர மோடி என்று பெயர்மாற்றம் செய்துள்ளீர்கள்.
கிரிக்கெட்டுக்காக பிரதமர் மோடி என்ன சாதித்தார்? என சரமாரியாக சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி...! அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடிப் போர் எச்சரிக்கை IBC Tamil