கார்த்திகை தீபத்திருவிழா.. 2,668 அடி உயரத்தில் ஜெகஜோதியாக ஏற்றப்பட்ட மகா தீபம்!
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
தீபத்திருவிழா
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகா தீபம்
இந்நிலையில், இன்று காலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் கருவறையின் முன் பரணி தீபம் ஏற்பட்டது. திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையில் மீது 4,500 லிட்டர் நெய்யை பயன்படுத்தி மகா தீபம் இன்று மாலை 6 மணியளவில் ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வை காண உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்கள்,வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். பக்தர்களின் ‘அரோகரா’ என்ற முழக்கத்துடன் விண்ணை ஒளிர செய்யும் விதமாக மகா தீபம் ஏற்பட்டது.