?LIVE : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023!

Tamil nadu Festival Tiruvannamalai
By Jiyath Nov 26, 2023 10:45 AM GMT
Report

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பல கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீப தரிசனத்தைக் காண நள்ளிரவு முதலே திரளான பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்தனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றிய பிறகு அதை தரிசித்த பின் 6.05 மணிக்கு மேல் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்.