ஃப்ரிஜில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுமா? தெரிஞ்சுக்கோங்க..
குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாவதாக தகவல் பரவி வருகிறது.
Fridge Magnets
ஃபிரிட்ஜை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் காந்தங்களால் (Fridge Magnets) மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதாக தகவல் வைரலாக பரவி வருகிறது.

மேலும், ஃபிரிட்ஜின் கதவு சரியாக மூடப்படாமல் போவதற்கும், அதன் செயல்திறன் குறைவதற்கும் இந்தக் காந்தங்களே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், ஃபிரிட்ஜ் மேக்னட்கள் சராசரியாக 5 மில்லிடெஸ்லா காந்தப்புலத்தை மட்டுமே கொண்டுள்ளன.
மின்சாரக் கட்டணம்
ஆனால், ஒரு மின்னணு சாதனத்தைப் பாதிக்க குறைந்தது 1,000 மில்லிடெஸ்லா வலிமை தேவை. இந்தக் காந்தப்புலம் ஃபிரிட்ஜின் மின்சார பாகங்களையோ அல்லது அதன் செயல்திறனையோ பாதிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது அல்ல என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் ஃபிரிட்ஜின் குளிரூட்டும் அமைப்பு என்பது கம்ப்ரசர் மற்றும் குளிர்பதன வாயு மூலம் செயல்படுகிறது. இதற்கும் ஃபிரிட்ஜின் வெளிப்புறத்தில் ஒட்டப்படும் காந்தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இந்தக் காந்தங்களால் ஃபிரிட்ஜின் மோட்டார் அல்லது அதன் செயல்திறனில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.