மேஜிக் காளானை தேடி வராதீங்க.. இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டி.எஸ்.பி!
கொடைக்கானலில் போதை காளானை தேடி வரும் இளைஞர்களுக்கு டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் டி.எஸ்.பி மதுமிதா செய்தியளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,'' கொடைக்கானலில் வெளிநாட்டினர், இளைஞர்களை அங்கு உள்ள மேஜிக் காளான் எனப்படும் போதை காளானை அதிகமாக ஈர்க்கிறது.
அப்படி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி, உள்ளூர் சுற்றப்பயணிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீது தமிழக காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் 8 பேர் போதை காளான் வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இதுவரை 53பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
மேஜிக் காளான்
தொடர்ந்து பேசிய கொடைக்கானல் டி.எஸ்.பி மதுமிதா ,கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் போதை காளான்கள் கொரியர் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளியூர்களில் யார், யாருக்கு இது விற்பனை செய்யப்பட்டது என்பதையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
போதை காளான்களை விற்பனை செய்ததாக, ஐந்து பேரை கொடைக்கானல் காவல் துறை சமீபத்தில் கைது செய்தது.
இந்த சூழலில் கொடைக்கானலில் மேஜிக் காளானை தேடி வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்தும் மேலும் பேங்க் அக்கவுண்ட் முடக்கிவிடப்படும் என்று கொடைக்கானல் டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.