கொடைக்கானல் செல்ல 3 கலரில் இ-பாஸ் !! நீங்க என்ன வாங்கணும்'னு தெரிஞ்சிக்கோங்க

Tamil nadu Dindigul
By Karthick May 07, 2024 03:02 AM GMT
Report

சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்ல இ - பாஸ் வாங்கும் நடைமுறை அமலாகியுள்ளது.

இ - பாஸ்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம் மற்றும் மாவட்டம் வாகனங்களும் இ-பாஸ் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது.

kodaikanal e pass

அதன் படி இன்று முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. 07.05.2024 இன்று முதல் வரும் ஜூன் 30 வரை இம்முறை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 கலர் 

இ - பாஸ் பெற பயனாளிகள் epass.tnega.org என்ற இணையதளத்தில் பெற்று கொள்ளும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸிற்காக விண்ணப்பிக்கும் போதே எந்த வாகனத்தில்? எத்தனை பேர்? எத்தனை நாட்கள் தங்குவீர்கள்? எங்கு தாங்குவீர்கள்? போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா..? இனிமேல் இது கட்டாயம் - நீதிமன்றம் அதிரடி!

ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா..? இனிமேல் இது கட்டாயம் - நீதிமன்றம் அதிரடி!

மேலும், கொடைக்கானலுக்கு வருவோர் சுற்றுலா பயணிகளா? வணிகர்களா? வியாபார பயணமா? போன்ற கேள்விகளுக்கும் பதிலளித்து அதற்கேற்ப இ பாஸ் பதிவு செய்து கொள்ளலாம். அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இ பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

kodaikanal e pass

3 வகையான அடையாள கோடுகளுடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது. பச்சை, நீலம், ஊதா என 3 கலர்கள் இடம்பெறுகின்றன

  • உள்ளூர் மக்களுக்கு பச்சை நிறம்.
  • வேளாண், விளை பொருட்கள், அத்தியாவசியத் தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீல நிறம்.
  • சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிறம்.