இன்னும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை கிடைக்க வில்லையா? இதை பண்ணுங்க..
மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு தொடர்பாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மகளிர் உரிமை தொகை
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. அதன்படி, 1.15 கோடி பேர் இந்த திட்டத்தால் பலன் பெறுகின்றனர்.
பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட காரணத்தால் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வகையில், இதனை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து இ- சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
மேல்முறையீடு
இந்நிலையில், மேல்முறையீடு செய்தவர்களில், ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் அது தொடர்பான விபரங்கள் சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்று கூறப்பட்டது.
அதிலும் நிராகரிக்கப்பவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் இ- சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மகளிர் உரிமை தொகைக்கு விண்ணபிக்காதவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதியதாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.