தீவிரமாகும் மகளிர் உரிமைத் தொகை பணிகள் - இன்னும் விண்ணப்பிக்கலையா? இதுதான் சரியான நேரம்!
மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
உரிமைத் தொகை
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி நடத்தி வருகிறது. அதன்படி, மாதம் தோறும் மகளிர் வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
அடுத்தடுத்த சில மாதங்களில் பயனாளர்கள் இணைக்கப்பட்டதால் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களாக உள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகள் காரணமாக, புதிய ரேஷன் அட்டை பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
புதிய ரேஷன் அட்டை
இந்நிலையில், அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள 2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின்னர் விநியோகிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அறிவிப்பு வெளியான பின்னர், ஆவணங்களை சமர்ப்பித்து திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், அதன் பின்னர் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள்.
ஜூலை மாத மகளிர் உரிமைத் தொகைக்கான பணம் புதிதாக இணைய உள்ளவர்களுக்கும் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.