மகளிர் உரிமைத் தொகை; புதிதாக 2 லட்சம் பேர் - அரசு எடுக்கும் முடிவு!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 2 லட்சம் பேர் இணையவுள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை
கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை ஒட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழக்கும் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மொத்தமாக 2 கட்டங்களின் முடிவில் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் பயனடைந்துள்ளனர். இதில், விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள். விண்ணப்பிக்கவே முடியாமல் போனவர்கள் பட்டியல் சில லட்சங்களும் உள்ளன.
ரேஷன் அட்டை விநியோகம்
இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின்னர் ஜூன் இரண்டாவது வாரம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் தொடங்கும் என்று கூறுகின்றனர்.
எனவே புதிதாய் இணைபவர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.