உரிமைத் தொகை மேல்முறையீடு செஞ்சுருக்கீங்களா? மெசேஜ் எப்போ வரும் - அரசு முக்கிய தகவல்!
மேல்முறையீடு செய்தவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைத் தொகை
கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை ஒட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழக்கும் உரிமைத் தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் முதற் கட்டமாக தகுதியான 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதனையடுத்து, புதிதாக 7 லட்சத்து 35 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டனர்.
முக்கிய அப்டேட்
மொத்தமாக 2 கட்டங்களின் முடிவில் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து, உரிமைத் தொகையில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்தது. அதன்படி, 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் உரிய தகவல் தெரிவிக்கப்படும். தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.