மகளிர் உரிமைத் தொகை; பிடித்தம் செய்யக்கூடாது - வங்கிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!
மகளிர் உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
உரிமைத் தொகை
மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்த 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1.6 கோடி மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தங்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும் 1000 ரூபாயை சில வங்கிகள் நிர்வாக காரணங்கள், சேவை கட்டணங்கள் போன்றவற்றிற்காக பிடித்தம் செய்வதாக தகவல் வெளியானது. இதனால் மகளிர் பலர் வேதனை தெரிவித்தனர்.
அமைச்சர் எச்சரிக்கை
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு வழங்கும் உரிமை தொகையை வங்கிகள் தங்களின் நிர்வாக காரணங்களுக்காக நேர் செய்யக்கூடாது என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்களை மீறி செயல்படும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கைக எடுக்கப்படும். இதுகுறித்து முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100 ஐ அழைத்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம்.
பெண்கள் அளிக்கும் புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.