யாருக்கெல்லாம் ரூ.1000; இதுதான் தகுதிகள், விதிகள் என்ன - அரசு முடிவு!

Tamil nadu
By Sumathi Jul 07, 2023 11:22 AM GMT
Report

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உரிமைத் தொகை

திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அண்ணாவின் பிறந்த நாளான செப்.15ம் தேதி முதல் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

யாருக்கெல்லாம் ரூ.1000; இதுதான் தகுதிகள், விதிகள் என்ன - அரசு முடிவு! | Womens 1000 Scheme Tamilnadu Instruction Details

இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திட்டத்தின் விதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத்தொகைக்கான சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதான் விதிகள்

இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைனில் பதிவு செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே பயன்பெற முடியும்.

பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளோர், அரசு அதிகாரிகள், 5 ஏக்கர் நிலம் வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொடை கிடைக்கப்பெறாது.

மேலும், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும், ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமை தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.