யார், யாருக்கெல்லாம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Mar 27, 2023 09:08 AM GMT
Report

யார்,யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க போகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு 

அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்காண பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

rs-1000-to-whom-and-to-whom-cm-stalin-anouncement

அப்போது அந்த பட்ஜெட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டார்.இதற்காக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதையடுத்து அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த அறிவிப்புக்கு ஏராளமான பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு 

இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என்று அறிவித்துள்ளார்.

rs-1000-to-whom-and-to-whom-cm-stalin-anouncement

இது குறித்து அவர் பேசுகையில், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள மகளிர், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், மீனவப் பெண்கள் , சாலையோரம் கடை வைத்திருக்கும் மகளிருக்கு உள்ளிட்ட ஒரு கோடி பேருக்கு மாதம் ரூ.1000 வழங்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.