மீனாட்சி அம்மன் கோவில் லட்டுவில் என்ன பிரச்சனை? உணவு பாதுகாப்புத்துறை தகவல்

Madurai
By Sumathi Sep 26, 2024 05:10 AM GMT
Report

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டு தரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு 2019ல் இருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் லட்டுவில் என்ன பிரச்சனை? உணவு பாதுகாப்புத்துறை தகவல் | Madurai Meenakshi Amman Temple Laddu Standard

இதற்காக லட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வாங்கி அதன் மூலம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி கோவில் லட்டு சர்ச்சையை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் குறித்தும் கேள்வி எழுந்தது.

ஓயாத லட்டு சர்ச்சை - கோயில் பிரசாதத்தில் கிடந்த எலிக்குஞ்சுகள்?

ஓயாத லட்டு சர்ச்சை - கோயில் பிரசாதத்தில் கிடந்த எலிக்குஞ்சுகள்?

லட்டுவின் தரம்

இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், அங்கு வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள், அழகர்கோவில் நெய் தோசை ஆகியவற்றை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

madurai meenakshi amman temple laddu

தொடர்ந்து இதுகுறித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராமபாண்டியன் கூறுகையில், "மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் குறித்து பலமுறை ஆய்வு செய்துள்ளோம்.

லட்டு உள்பட அனைத்தும், சுத்தமாகவும், தரமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.