லட்டுக்குள் கிடந்த குட்கா கவர், சிகரட் துண்டு; அதிர்ச்சி வீடியோ - தொடர் சர்ச்சையில் திருப்பதி!

Viral Video Tirumala
By Sumathi Sep 24, 2024 06:10 AM GMT
Report

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

tirupati laddu

இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கள்ளச் சந்தையில் லட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் ஓய்வதற்குள் கொல்லகூடேம் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் அண்மையில் திருப்பதி கோவிலுக்குச் சென்று அங்கு வாங்கிய லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி லட்டில் எப்படி மாட்டுக்கொழுப்பு - பகீர் தகவல் தெரிவித்த கோவில் அதிகாரி!

திருப்பதி லட்டில் எப்படி மாட்டுக்கொழுப்பு - பகீர் தகவல் தெரிவித்த கோவில் அதிகாரி!

அதிர்ச்சி வீடியோ

தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரிக்க திருப்பதி தேவஸ்தான குழுவினர், கொல்லகூடேம் கிராமத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டதாக ஆய்வில் தெரியவந்த நிலையில் திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் இடங்கள், லட்டு விற்கும் பகுதி உள்ளிட்ட கோவிலின் சில பகுதிகளில் சாந்தி ஹோமம் நடைபெற்றது.

கோயில் மீண்டும் தூய்மையாகிவிட்டதாகக் கூறிய அர்ச்சகர்கள், பக்தர்களை தயக்கமின்றி கோயிலுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.