திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு - தோஷத்தை போக்க அர்ச்சகர்கள் செய்த சம்பவம்!
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு
திருப்பதி லட்டு ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்கு பெரிய மவுஸ் உண்டு.
இந்நிலையில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன் பின் திருப்பதி லட்டில் கொழுப்பு உள்ளதா என ஆய்வு செய்த கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை வெளியானது. இதில் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய்,
அர்ச்சகர்கள்
மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிதாக நெய் கொள்முதல் செய்யப்பட்டு, நேற்று முதல் புதிதாக லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பரிகாரமாக, அர்ச்சகர்கள் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தினர்.
காலை 6 மணி முதல் 9 மணி வரை தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு பிரசாதம்,
லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டு விநியோகம் செய்யும் கவுன்ட்டர்கள், 4 மாட வீதிகளில் அர்ச்சகர்கள் தெளித்தனர். இதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.