திருப்பதி லட்டில் எப்படி மாட்டுக்கொழுப்பு - பகீர் தகவல் தெரிவித்த கோவில் அதிகாரி!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கள்ளச் சந்தையில் லட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.
அதிகாரி தகவல்
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இதுகுறித்து தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், ஏ.ஆர்.புட்ஸ் நிறுவனம் அனுப்பிய 4 நெய் டேங்கர்கள் தரமற்றவை என முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
பன்றிக்கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தரமில்லாததற்குக் காரணம் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமாக ஆய்வகம் இல்லை. இந்த குறைபாடுகளை சப்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
NDDB நெய் கலப்பட பரிசோதனை கருவிகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக வரும் டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் ரூ.75 லட்சம் மதிப்பிலான புதிய ஆய்வுக்கூடம் நிறுவப்படும் எனத் தெரிவித்துள்ளார்.