பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு? அதே கம்பெனி - பகீர் குற்றச்சாட்டு!

BJP Ghee Tirumala Dindigul
By Sumathi Sep 20, 2024 10:27 AM GMT
Report

பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பழனி பஞ்சாமிர்தம்

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்தியதாக வைத்த குற்றச்சாட்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

palani panjamirtham

தொடர்ந்து, திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை சோதனை செய்ததில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை அதில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தொழிற் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற உத்தமர் ராஜசேகர்தான் (AR Foods ) பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறார்.

லட்டில் மாட்டுக் கொழுப்பு; இனி திருப்பதிக்கு என்னாகும்? பின்னணி!

லட்டில் மாட்டுக் கொழுப்பு; இனி திருப்பதிக்கு என்னாகும்? பின்னணி!

அதிர்ச்சி தகவல்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்படிபட்ட ஒரு நல்லவரைதான் பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்துள்ளது சனாதன ஒழிப்பு திமுக அரசு. ஆந்திராவின் பெருமை திருப்பதி. தமிழகத்தின் பெருமை பழனி. ஒரே சமயத்தில் இரண்டு கோவில்களிலும் ஒரே நபர்.

கடந்த 2022ம் ஆண்டு திமுக நியமித்த புதிய அறங்காவலர் பொறுப்பேற்ற பிறகுதான் பழனி பஞ்சாமிர்தத்தின் தரம் கெட்டு போயுள்ளது. பல முறை குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், அறங்காவலர் குழு மழுப்பலாக பதில் சொல்லி வருவது யாரை காப்பாற்ற?

பழனி பஞ்சாமிர்தம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சப்ளை செய்யப்படும் நெய்யை பரிசோதனை செய்தால் உண்மை தெரியவரும்" எனக் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.