ஓயாத லட்டு சர்ச்சை - கோயில் பிரசாதத்தில் கிடந்த எலிக்குஞ்சுகள்?
விநாயகர் கோயில் பிரசாதத்தில் எலி குஞ்சுகள் கிடந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் பிரசாதம்
மும்பையில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வழங்கப்படும் லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் சுண்டெலிகள் கிடப்பது போல வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
தொடர்ந்து இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என கோயில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சித்திவிநாயகர் கோவில் கமிட்டி தலைவர் சதா சரவங்கர் மறுத்துள்ளார்.
அதிர்ச்சி தகவல்
அந்த வீடியோ எங்கள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டது இல்லை. இது யாரோ செய்த சதி.கோயில் வளாகத்தில் தினமும் 50 ஆயிரம் லட்டுகள் பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் லட்டுக்கான தேவை அதிகரிக்கும்.
VIDEO | "Rats are visible in a plastic bag (in the video) and there's a blue colour container. Lakhs of laddus are distributed during the day and the place the laddus are prepared is very neat and clean. The video shows a dirty place, I can see that the video is not of the… pic.twitter.com/fE0cJRf6VJ
— Press Trust of India (@PTI_News) September 24, 2024
பிரசாதத்துக்கு தலா 50 கிராம் கொண்ட இரண்டு லட்டு பாக்கெட்டுகள் உள்ளன. லட்டுவில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உணவு மற்றும் மருந்து துறையால் சான்றளிக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.
ஆய்வக சோதனையின்படி, இந்த மஹாபிரசாத லட்டுகள் 7 முதல் 8 நாட்கள் வரை பாதுகாப்பாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.