ராமர் கோவில் பிரசாத விவகாரம் - அமேசானுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..காரணம் என்ன?
அமேசானில் விற்பனை செய்யப்படும் போலியான அயோத்தி ராமர் கோவில் பிரசாதங்களுக்கு தகுந்த பதிலளிக்குமாறு மத்திய நுகர்வோர் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீஸ்
2 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு தற்போது ஜனவரி 22ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி உட்பட பல நாட்டின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் இந்திய வர்த்தக கூட்டமைப்பு பிரசாதம் என ராமர் கோவில் பிரசாதத்தை போலியாக விற்பனை செய்வதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் வந்துள்ளது.
போலியான....
இந்த புகாரின் அடிப்படையில் அமேசான் நிறுவனத்திற்கு இதுகுறித்து 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 - ன் விதிப்படி அமேசான் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து அமேசான் நிறுவனம் அளித்த அறிக்கையில், "சில விற்பனையாளர்கள் மூலம் தங்கள் தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் போலியானது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.