5 வருசத்திற்குப் பின் கலைக்கட்டிய நிகழ்ச்சி; கட்டுக்கடங்காத கூட்டம் - மயங்கிய பெண்கள்!
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை காண ஏராளமானவர்கள் குவிந்ததால் பாதியில் நிறுத்தப்பட்டது.
ஹேப்பி ஸ்ட்ரீட்
மதுரை, அண்ணா நகரில் 5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் "WOW MADURAI" என்ற தலைப்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி, தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி,
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனி தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர், ஆணையாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி நிறுத்தம்
இதனால், எதிர்பார்த்ததை விட இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் கூட்டம் அதிகமாக இருந்ததால் நிகழ்ச்சியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதுடன் மயக்கம் அடைந்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக பாதுகாப்பு கருதி 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. இதையடுத்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.