யுவன்சங்கர் ராஜா இசைநிகழ்ச்சியில் விபரீதம் - என்ன நிகழ்ந்தது?

Yuvan Shankar Raja Coimbatore Accident
By Sumathi Oct 08, 2022 02:18 PM GMT
Report

யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இசை நிகழ்ச்சி

கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் கலை அறிவியல் கல்லூரியில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக யுவன்சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தகவல் மற்றும்

யுவன்சங்கர் ராஜா இசைநிகழ்ச்சியில் விபரீதம் - என்ன நிகழ்ந்தது? | Wall Collapsed In Yuvanshankar Concert

முதல் வரும் ஆயிரம் பேருக்கு இலவச அனுமதி என்ற விளம்பரத்தை பார்த்து சுமார் 15 ஆயிரம் பேர் அங்கு கூடினர். இந்நிலையில் அதிகபடியாக வந்த கூட்டத்தால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இடிந்து விழுந்த சுவர்

ஆனாலும் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் அங்கிருந்த கல்லூரி சுற்றுச்சுவர் மீது ஏறியும் உள்ளே செல்ல முயன்றதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஏராளமானோர் சுற்றுச்சுவர் மீது ஏறிச் செல்ல முயன்றதால், சுவர் இடிந்து விழுந்தது.

யுவன்சங்கர் ராஜா இசைநிகழ்ச்சியில் விபரீதம் - என்ன நிகழ்ந்தது? | Wall Collapsed In Yuvanshankar Concert

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் பிளோமினா உள்ளிட்ட காவலர்கள், மற்றும் இளைஞர்கள் காயமடைந்தனர். சுவர் இடிந்ததையும் கவனிக்காமல் பலர் விழுந்தவர்கள் மீதே ஏறிச் சென்றதால் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதா? என்பது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.