இனி... டாக்டர் யுவன் : டாக்டர் பட்டம் பெற்றார் யுவன்சங்கர் ராஜா
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் படம் மூலம் தமிழ் திரையிசை உலகில் அடியெடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகிறது. தமிழின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இளசுகளின் மன ஓட்டம் அறிந்து குத்தாட்டம் போட வைக்கும், தனிமையில் ரசிக்க வைக்கும், கவலைகளில் இருந்து தேற்றும் பல பாடல்களைக் கொடுத்திருக்கிறார் யுவன்.
டாக்டர் பட்டம்
இன்றும் பின்னணி இசையின் கிங்காக வலம் வரும் யுவனுக்கு அதிதீவிர ரசிகர்கள் கோடிக்கணக்கில் உண்டு. இசைஞானி, இசைப்புயல் வரிசையில் எந்தப் பட்டங்களையும் தன் பெயருக்குப் பின்னால் போடாமல் தவிர்த்து வந்த யுவன் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
சத்யபாமா பல்கலைகழகம்
சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது அதில் இசையமைப்பாளர் யுவனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இசைத்துறையில் 25 ஆண்டுகளாக தனது ரசிகர்களை கட்டிவைத்திருக்கும் யுவன்சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது சத்யபாமா பல்கலைகழகம்
பல்கலைகழகத்தில் மாணவ, மாணவிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முனைவர் பட்டம் பெற்ற யுவன்சங்கர் ராஜாவிற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.