மதுரை ED அலுவலகம்; 13 மணி நேர சோதனை - சிக்கிய ஆவணங்கள், யாருக்கெல்லாம் தொடர்பு?
மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
சிக்கிய அதிகாரி
திண்டுக்கல், அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில்,
மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அவரிடம் நடத்திய விசாரணையில், இது போன்று பல நபர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
15 நாள் காவல்
15 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தியதில் அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மாலையில் தொடங்கிய சோதனை, விடிய விடிய 13 மணி நேரம் நடைபெற்றது. மேலும், அது தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனைகள் மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.