இப்படி மாட்டிக்கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் - குறிவைத்த அமலாக்கத்துறை!

Prakash Raj trichy
By Sumathi Nov 24, 2023 05:04 AM GMT
Report

நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ்

திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம், நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் என்ற நகைக் கடை இயங்கி வந்தது. அங்கு சிறு சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் அதிகளவில் போனஸ் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

ed-summons-actor-prakash-raj

இதனை நம்பி முதலீடு செய்தவர்கள் தொகையை கேட்டபோது அலட்சியப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கடந்த மாதம் நகைக் கடை திறக்கப்படாமல் பூட்டிக் கிடப்பதாகவும், முதலீடு செய்தவர்களை ஏமாற்றி விட்டு நகைக்கடை உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் புகார்கள் வந்தன.

பாஜகவை எதிர்ப்பதால் என்னுடன் பேச பயப்படுகிறார்கள் : பிரகாஷ்ராஜ்

பாஜகவை எதிர்ப்பதால் என்னுடன் பேச பயப்படுகிறார்கள் : பிரகாஷ்ராஜ்

அமலாக்கத் துறை சம்மன் 

அதன்பின், நகைக்கடை உரிமையாளர்கள் மதன், அவரது மனைவி கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து, இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள 11 இடங்களில் இந்தக் கடையின் கிளைகளில் சோதனை நடத்தியதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும்ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

actor-prakash-raj

திருச்சி கிளை மேலாளர் நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரூ.100 கோடி பொன்சி திட்ட முறைகேடு தொடர்பாக இந்தக்கடையின் விளம்பர தூதுவராக உள்ள பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.