பாஜகவை எதிர்ப்பதால் என்னுடன் பேச பயப்படுகிறார்கள் : பிரகாஷ்ராஜ்

Prakash Raj BJP
By Irumporai Nov 18, 2022 05:16 AM GMT
Report

பாஜகவை எதிர்ப்பதால் தன்னுடன் நடிகர்கள் டெக்னீசியன்கள் பேசபயப்படுவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

 பிரகாஷ்ராஜ் காட்டம்

கடந்த நாடளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு பாஜகவுக்கு எதிராக பிரச்சராம் செய்தார், அதோடு மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், பல நடிகர்கள் ,டெக்னீசியன்கள் என்னுடன் பணியாற்ற விரும்பவில்லை. அரசியலில் நான் ஒரு நெருப்பு பிராண்டாக இருப்பதால் அவர்கள் பயப்படுகிறார்கள்.

பாஜகவை எதிர்ப்பதால் என்னுடன் பேச பயப்படுகிறார்கள் : பிரகாஷ்ராஜ் | Actors Are Because They Oppose Bjp

என் அரசியல் நடவடிக்கைகளால் என் பணி பாதிக்கப் படுகிறது. அதற்காக நான் அரசியலை தூக்கி வீசி விட முடியாது. வேண்டுமென்றால் என் பணியை விட்டு ஒதுங்கி இருக்கலாம் . அந்த அளவுக்கு வசதியும் வலிமையும் எனக்கு இருக்கிறது.

என்னிடம் பேசவே பயப்படுகின்றனர்

பல நடிகர்கள் என்னிடம் பேசுவதில்லை. என்னிடம் பேச பயப்படுகிறார்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை . ஒரு பிரச்சனைக்கு எதிராக பேசுவது அந்த கலைஞர்களை பாதிக்கும் என்பதால் அவர்களை நான் குறை சொல்லவும் இல்லை.

இப்பொழுது தான் நான் இன்னும் சுதந்திரமாக உணர்கிறேன் . ஏனென்றால் நான் எனக்கு குரலை உயர்த்தாமல் இருந்திருந்தால் என் படங்களின் காரணமாக நான் ஒரு நல்ல நடிகராக மட்டுமே அறியப்பட்டிருப்பேன்.

ஆனால் நான் இல்லாமல் போகும்போது நல்ல மனிதனாகவும் பிரகாஷ்ராஜ் இருந்தான் என்று சொல்ல வேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.