3வது முறையாக திருமணம் செய்த பிரகாஷ்ராஜ் - பொண்ணு யார் தெரியுமா?

Actor prakash raj
By Petchi Avudaiappan Aug 24, 2021 08:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது 11வது திருமணநாள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான பிரகாஷ்ராஜ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வம் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

இவர் நடிகை லலிதா குமாரியை 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் பரஸ்பர சம்மதத்துடன் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இதனையடுத்து 2010 ஆம் ஆண்டு போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் நேற்று தனது 11 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

அப்போது தனது மகன் வேதந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டோம் என ட்விட்டரில் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.