லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

Lyca
By Irumporai May 16, 2023 03:51 AM GMT
Report

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிறுவனம் சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். ஏற்கனவே, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் சரியாக ஓடவில்லை என்றும் வசூலிலும் சற்று தோல்வியை சந்தித்தள்ளது.  

லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை | Conducted Surprise Raids At To Lyca Productions

பொன்னியின் செல்வன் வசூல்:

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான நாளில் இருந்து உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்திருந்தது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, படம் 300 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.