கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகள்.. நிற்கவைத்து பனிஷ்மென்ட் கொடுத்த கலெக்டர் - அதிரடி!

Madurai
By Vinothini Oct 16, 2023 10:06 AM GMT
Report

தாமதமாக வந்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தண்டனை கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறைதீர் கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். இதில் மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் எந்த பிரச்சனை வந்தாலும் ஆட்சியரை சந்தித்து சமானியர்கள் புகார் அளிக்க முடியும்.

madurai-collector-gave-punishment-to-late-comers

அப்பொழுது துறை வாரியாக சரிசெய்யப்படாத பிரச்சனைகளை அந்த அதிகாரிகளை குறிப்பிட்டு சரி செய்ய கூறி மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார். இதனால் திங்கட்கிழமையன்று எப்பொழுதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்படும்.

குட் நியூஸ்.. இனி ரேஷன் கடைகளுக்கு பணம் தேவையில்லை - மொபைல் முத்தம்மா திட்டம் அறிமுகம்!

குட் நியூஸ்.. இனி ரேஷன் கடைகளுக்கு பணம் தேவையில்லை - மொபைல் முத்தம்மா திட்டம் அறிமுகம்!

தண்டனை

இந்நிலையில், திங்கள்கிழமையான இன்று மதுரையில் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா 9.30 மணிக்கு முன்பாக குறைதீர்ப்பு முகாம் கூட்டரங்கிற்கு வந்துவிட்டார். பல அதிகாரிகள் வராததால் சுமார் 15 நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்தார் ஆட்சியர்.

madurai-collector-gave-punishment-to-late-comers

அதன்பிறகு தாமதமாக வந்தவர்களை வெளியிலேயே நிற்க வைத்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அதிகாரிகளை உள்ளே அனுமதித்தார். இதனை அங்கு வந்த மக்கள் அதிகாரிகள் வெளியே நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் நிலவியது.