குட் நியூஸ்.. இனி ரேஷன் கடைகளுக்கு பணம் தேவையில்லை - மொபைல் முத்தம்மா திட்டம் அறிமுகம்!

Tamil nadu I. Periyasamy
By Vinothini Oct 16, 2023 05:02 AM GMT
Report

தமிழக அரசு ரேஷன் கடைகளில் மொபைல் முத்தம்மா திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல்

இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் வந்துவிட்டது. பல இடங்களில் தற்பொழுது பணம் செலுத்துவதும் ஆன்லைன் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்று தற்போது ஜி பே, பேடிஎம் போன்றவை மக்களிடம் பழக்கமாகிவிட்ட ஒன்றாக மாறி விட்டது.

tn-introduced-mobile-muthamma-scheme-in-ration

சிறு கடைகள் முந்தல் பெரிய ஷாப்பிங் மால் வரை எல்லாமே யுபிஐ பேமெண்ட் தான். இதனால் பலர் கையில் பணம் வைத்துக்கொள்வதே இல்லை, தற்பொழுது ரேஷன் கடைகளிலும் இந்த வசதி வந்துள்ளது.

மகளிர் உரிமை என்கிறார் ஸ்டாலின்.. கனிமொழியை கட்சித் தலைவராக்குவாரா? - ஜெயக்குமார் காட்டம்!

மகளிர் உரிமை என்கிறார் ஸ்டாலின்.. கனிமொழியை கட்சித் தலைவராக்குவாரா? - ஜெயக்குமார் காட்டம்!

புதிய திட்டம்

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் "யு.பி.ஐ. டிஜிட்டல்" பரிவர்த்தனை முறை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து இருந்தார். சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

tn-introduced-mobile-muthamma-scheme-in-ration

சென்னை நகரில் 1,500 கடைகளிலும், புறநகரில் 562 கடைகளிலும் "மொபைல் முத்தம்மா" என்ற டிஜிட்டல் பரிவர்தனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது சென்னை மாநகர் முழுவதும் மொத்தமாக 1,700-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ள நிலையில், 1,500-க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்படவுள்ளது, கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.