இனி ரேஷன் கடைக்கு பணம் கொண்டு செல்ல தேவையில்லை - புதிய வசதி அறிமுகம்!

Tamil nadu
By Vinothini Oct 13, 2023 10:28 AM GMT
Report

தமிழக அரசு ரேஷன் கடைகளில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல்

இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் வந்துவிட்டது. பல இடங்களில் தற்பொழுது பணம் செலுத்துவதும் ஆன்லைன் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்று தற்போது ஜி பே, பேடிஎம் போன்றவை மக்களிடம் பழக்கமாகிவிட்ட ஒன்றாக மாறி விட்டது.

tn-govt-introduced-upi-payment-in-ration-shop

சிறு கடைகள் முந்தல் பெரிய ஷாப்பிங் மால் வரை எல்லாமே யுபிஐ பேமெண்ட் தான். இதனால் பலர் கையில் பணம் வைத்துக்கொள்வதே இல்லை, தற்பொழுது ரேஷன் கடைகளிலும் இந்த வசதி வந்துள்ளது.

திடீரென மயங்கி விழுந்த வைகோவின் கார் டிரைவர் - மர்ம மரணம்!

திடீரென மயங்கி விழுந்த வைகோவின் கார் டிரைவர் - மர்ம மரணம்!

புதிய வசதி

இந்நிலையில், நியாயவிலைக் கடைகளில் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை ஏற்கனவே தெரிவித்தது. அதுபோல தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

tn-govt-introduced-upi-payment-in-ration-shop

சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் 1,500 கடைகளிலும், புறநகரில் 562 கடைகளிலும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.