பம்பரம் சின்னம் கேட்டு வைகோ வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Marumalarchi Dravida Munnetra Kazhagam Vaiko Tamil nadu Chennai
By Jiyath Mar 01, 2024 07:46 AM GMT
Report

மதிமுக மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வைகோ மனு 

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டு வருகிறது.

பம்பரம் சின்னம் கேட்டு வைகோ வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Madras Hc Order In Vaiko Case

இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன்.

விதிமீறல் செய்து புட் ரிவ்யூ - பெண் யூடியூபருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீஸ்!

விதிமீறல் செய்து புட் ரிவ்யூ - பெண் யூடியூபருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீஸ்!

உயர்நீதிமன்றம் உத்தரவு 

பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை. வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. எங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

பம்பரம் சின்னம் கேட்டு வைகோ வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | Madras Hc Order In Vaiko Case

இந்த மனுவானது நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுக மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர்.

மேலும், மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கின் மீதான விசாரணையை மார்ச் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.