எந்த நடிகர்களிடமும் இல்லாத அந்த பண்பாடு விஜய்யிடம் இருக்கிறது.. அரசியலுக்கு வரலாம் - வைகோ நெகிழ்ச்சி!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த வைகோ "விஜய் ஒரு நல்ல நடிகர். மிகவும் மரியாதையுடன் இருப்பார். விமான நிலையத்தில் என்னைப் பார்த்தல், அவர் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து வந்து கும்பிட்டு மரியாதை காட்டுவார்.
மரியாதை தெரிந்தவர்
மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்பாடு கலையுலகில் மற்ற எந்த நடிகர்களிடமும் இல்லை. விஜய்யிடம் அந்த பண்பாடு இருக்கிறது. அவர் அரசியலுக்கு நிச்சயம் வரலாம்.

அவருக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், அவர் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறாரோ, அந்த திட்டங்களை மக்களிடம் வைக்கட்டும்." என்று வைகோ தெரிவித்துள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil