விதிமீறல் செய்து புட் ரிவ்யூ - பெண் யூடியூபருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீஸ்!
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஒட்டிய பெண் யூடியூபருக்கு சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
விதிமீறல்
சென்னை அண்ணா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 'புட் ரிவ்யூ' செய்த வீடியோவை பெண் யூடியூபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது போன்று இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து சமுக ஆர்வலர் ஒருவர், அந்த பெண்ணின் வீடியோவை பகிர்ந்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார்.
அபராதம்
அந்த வீடியோவை சென்னை போக்குவரத்து போலீசாரின் சமூக வலைதளத்திலும் டேக் செய்திருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.
இந்த சம்பவம் யூடியூபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் யூடியூபர்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.