உலகின் பணக்கார யூடியூபர்; கோடிகளில் வருமானம் பெரும் இந்திய பெண் - எவ்வளவு தெரியுமா?

Youtube United States of America India World
By Jiyath Aug 11, 2023 10:16 AM GMT
Report

உலகின் பணக்கார யூடியோபர்களில் ஒருவரான லில்லி சிங் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

லில்லி சிங்

இந்திய வம்சாவளியை சேர்ந்த 34 வயதான பெண் லில்லி சிங். “சூப்பர்வுமன்” புனைபெயரில் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரின் பெற்றோர்கள் பின்னர் கனடாவில் குடியேறினார்கள். உலகில் யூடியூப் மூலம் அதிகமாக சம்பாதிக்கும் நபர்களில் ஒருவர் லில்லி.

உலகின் பணக்கார யூடியூபர்; கோடிகளில் வருமானம் பெரும் இந்திய பெண் - எவ்வளவு தெரியுமா? | Woman Lilly Singh On Worlds Richest Youtuber I

இவர் கடந்த 2010ம் ஆண்டு தனது யூடியூப் பயணத்தை தொடங்கினார். அதற்கு முன்பு பாஸ்ட் ஃபுட் உணவகம் ஒன்றில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்தார். இவர் தனது யூடியூப் சானலில் அனைவரையும் ஈர்க்கும் வகையிலான ஊக்கமூட்டும் பேச்சுகள், அன்றாட நடவடிக்கைகள், எது குறித்தும் நக்கலும், நையாண்டியுமாக விமர்சிப்பது போன்ற வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்தார்.

உலகின் பணக்கார யூடியூபர்; கோடிகளில் வருமானம் பெரும் இந்திய பெண் - எவ்வளவு தெரியுமா? | Woman Lilly Singh On Worlds Richest Youtuber I

கடந்த 2016ம் ஆண்டு யூடியூப் மூலம் அதிக சம்பாத்திய பெரும் பெண்களில் முதல் இடம் பிடித்தார். கனடாவில் வசித்து வந்த லில்லி தன்னுடைய யூடியூப் கேரியரை விரிவாக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார்.

சொத்து மதிப்பு

பிரபலமாக மாறிய பின்னர் விவாத நிகழ்ச்சி நடத்துபவராகவும் பின்னர் இசை வீடியோக்களை நடிக்கவும் தொடங்கினார். அமெரிக்காவின் பிரபலமான பின்னிரவு விவாத நிகழ்ச்சியை நடத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் லில்லி சிங் ஆவார்.

உலகின் பணக்கார யூடியூபர்; கோடிகளில் வருமானம் பெரும் இந்திய பெண் - எவ்வளவு தெரியுமா? | Woman Lilly Singh On Worlds Richest Youtuber I

கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா, துபாய், ஹாங்காங், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணம் மொத்தத்தையும் ஒரு ஆவணப் படமாக தாயாரித்து யூடியூபில் வெளியிட்டார். கடந்த 2019ம் ஆண்டு தான் ஒரு இருபாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக சமூக ஊடகத்தில் கூறினார். இவருக்கு லாஸ் ஏஞ்செல்ஸில் 6000 சதுர அடியில் 5 படுக்கை அறைகள் மற்றும் 6 கழிப்பறைகள் கொண்ட அரண்மனை போன்ற வீடு ஒன்று உள்ளது.

உலகின் பணக்கார யூடியூபர்; கோடிகளில் வருமானம் பெரும் இந்திய பெண் - எவ்வளவு தெரியுமா? | Woman Lilly Singh On Worlds Richest Youtuber I

இந்த வீட்டில் மதிப்பு 4.1 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதற்கு முந்தைய வருடங்களில், உலகத்தில் யூடியூப் மூலமாக அதிகம் சம்பாதிக்கும் நபர்களில் மூன்றாவது மட்டும் பத்தாவது இடத்தை லில்லி சிங் பெற்றுள்ளதாக போர்பஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே 20 மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் என கூறப்படுகின்றன