விஜய் குழந்தை மாதிரி; கரு கரு கருப்பாயி - கிளாமரில் தெறிக்கவிடும் மடோனா பளீச்!
நடிகை மடோனா செபாஸ்டியன் லியோ குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
மடோனா செபாஸ்டியன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில், த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் , மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் நடித்திருப்பதாக படக்குழு தகவல் வெளியிட்டிருந்தது.
லியோ அனுபவம்
ஆனால், மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப், மாயா கிருஷ்ணன், ஜார்ஜ் குட்டி என பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளது சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இந்நிலையில், ரசிகர்களை படத்தின் மூலம் வெகுவாக கவர்ந்த மடோனா செபாஸ்டியன், லியோ படத்தில் தான் நடிப்பது ரசிகர்களுக்கு தெரிந்த பின்னும் படக்குழுவினர் அதை சர்ப்ரைஸாக வைத்திருந்தது தனக்கு மகிழ்ச்சி.
நடிகர் விஜய் செட்டில் குழந்தை மாதிரி இருப்பார் என்றும், நடிக்கும் போது வேற மனிதராக மாறிவிடுவார். ஹரோல்டு தாஸாக நடித்த அர்ஜுனை பார்த்து தான் பேச பயந்தேன். பின் அவரிடம் முதல்வன் படம் குறித்து பேசினேன். லோகேஷ் கனகராஜ் எங்களை வேற ஒரு உலகத்திற்கு கூட்டிச் சென்றுவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவர் பகிர்ந்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பிளாக் நிற உடையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.