புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் 'லியோ' படம் பார்க்க ஏற்பாடு - மருத்துவமனைக்கு லோகேஷ் பாராட்டு!

Vijay Tamil nadu Chennai Lokesh Kanagaraj Leo
By Jiyath Oct 22, 2023 06:38 AM GMT
Report

சென்னை பில்ராத் மருத்துவமனை, புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்

லியோ திரைப்படம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. தற்போது வரை படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள்

இந்நிலையில் கடந்த 30 வருடங்களாக புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சென்னை 'பில்ராத் மருத்துவமனை' இந்த மாதம் 'பிங்கி அக்டோபர்' என்பதால் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வரவும், புற்றுநோய் நோய் ஒரு பயங்கரமான நோயல்ல என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவமனை நிர்வாகம் இறங்கியுள்ளது. அதற்காக புற்று நோயிலிருந்து மீண்டவர்கள் மற்றும் மருத்துவர்கள் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் பகீர் தகவல்!

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் பகீர் தகவல்!

புற்றுநோய் விழிப்புணர்வு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் தீபா "புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோயல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த கூடிய ஒன்றுதான். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் போது கூடிய விரைவில் குணப்படுத்த முடியும்.

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள்

மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் அதிகமான மக்கள் புற்றுநோயிலிருந்து குணமாகலாம். புற்றுநோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்த சென்னையில் உள்ள அனைத்து பிவிஆர் திரையரங்குகளிலும் விஜய் நடித்த லியோ படத்தைப் பார்க்க 4 ஆயிரத்து 500 டிக்கெட்டுகளை வழங்கி உள்ளோம். புற்றுநோயால் போராடி வருபவர்களுக்கு மட்டுமின்றி மருத்துவமனையின் அனைத்து மருத்துவர்கள், பணியாளர்கள், வார்டு உதவியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் படம் பார்க்க உணவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோயால் போராடி வருபவர்களுக்கு தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தெரியப்படுத்தினோம். அவரும் அப்படியா நல்ல விஷயம் என எங்களைப் பாராட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.