க்ளீன் ஸ்வீப்; காங்கிரசை ஓடவிட்ட பாஜக - எங்கு தெரியுமா?
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசம் என்பது பாஜகவின் கோட்டையாக உள்ளது. தற்போது மோகன் யாதவ் என்பவர் முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
இங்கு 29 தொகுதிகளில் பாஜக தனித்து களமிறங்கி உள்ளது. காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் அதாவது கஜுராஹோ தொகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் போட்டியிட்டது.
பாஜக ஆதிக்கம்
முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸின் பிரதாப் பானு களமிறங்கி உள்ளார். மேலும் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் சேர்ந்தார். இதனால் பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி காங்கிரஸ் அல்லாத பிற வேட்பாளர்களுடன் மோதுகிறார். இந்நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்னிக்கை தொடங்கி நடந்து வருகிறது.
அதன்படி, முதலில் தபால் ஓட்டு முதல் தொடர்ந்து 29 தொகுதிகளிலம் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் அல்லாத பிற வேட்பாளர்கள் பலமின்றி உள்ளதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.