கேரளா: வெற்றி முகம் காணும் காங்கிரஸ் கூட்டணி - 20 தொகுதிகளில் 19-ல் முன்னிலை!
19 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
கேரளா
கேரளாவில் மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்திய அளவில் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் கேரளாவில் தனித்துப் போட்டியிட்டன.
வயநாட்டில், தற்போதைய எம்.பி ராகுல் காந்தி (காங்கிரஸ்) ஆனி ராஜா (இ.கம்யூனிஸ்ட்) மற்றும் பாஜக கேரள மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
இந்நிலையில், இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இங்கு அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்கள் 19 பேர் முன்னிலையில் உள்ளனர்.
இதனால் அந்த கூட்டணியில் உள்ளவர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.