தாம்பத்யத்திற்கு மனைவி மறுப்பு; கொடுமைப்படுத்துவதற்கு சமம் - கொந்தளித்த உயர்நீதிமன்றம்!
தாம்பத்யத்திற்கு மனைவி மறுப்பது கொடுமைப்படுத்துவதற்கு சமம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உறவுக்கு மறுப்பு
மத்தியப் பிரதேசம், போபாலைச் சேர்ந்தவர் சுதீத்தோ ஷா. கடந்த 2006ல் மோமிதா ஷா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து திருமணமான 16 நாட்களில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்த இடைப்பட்ட நாட்களில் மணைவி தாம்பத்ய உறவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான காரணத்தையும் கூற மறுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கணவன் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் மனைவி விவாகரத்து தரவும் மறுத்துள்ளார்.
விவாகரத்து
அதன்பின், 2014ல் நீதிமன்றம் மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுத்ததாகக் கூறி விவாகரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, சுஜீத் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
மேலும், உடல் ரீதியிலான காரணங்கள் ஏதும் இல்லாமல் நீண்ட காலமாகக் கணவருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள மனைவி மறுப்பதும், விவாகரத்து தர மறுப்பதும் மனதளவில் கொடுமைப்படுத்தும் செயல்தான். இதனைக் காரணமாகச் சொல்லி விவாகரத்து பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.