தாம்பத்யத்திற்கு மறுத்த மனைவி; கொடுமைதான் - விவாகரத்து வழக்கில் நீதிமன்றம்!

Delhi Divorce
By Sumathi Nov 01, 2023 06:59 AM GMT
Report

விவாகரத்து வழக்கில், நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

விவாகரத்து வழக்கு

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் மனைவி தன்னை மன ரீதியாகக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து கோரினார். மேலும், திருமணத்திற்குப் பிறகு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்றும்,

delhi high court

தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து அளித்தது. தொடர்ந்து, இதை எதிர்த்து அந்தப் பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் தீர்ப்பு

இதனை விசாரித்து நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் நீதிபதி மனோஜ் ஜெயின் தலைமையிலான அமர்வு, பாலியல் உறவை மறுப்பதும் மன ரீதியாக ஒருவரைக் கொடுமைப்படுத்துவதற்குச் சமம்.

divorce case

இந்த வழக்கில் அந்த நபர் தெளிவாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. பொத்தாம் பொதுவாகவே கூறியிருக்கிறார். மேலும், இந்த வழக்கில் கணவன் தனக்கு ஏற்பட்ட மன ரீதியான கொடுமைகளை நிரூபிக்கத் தவறிவிட்டது. இது சாதாரணமாகத் திருமணத்தில் ஏற்படும் பிரச்சினை தான்.

திருமணமாகி ஒரே வருடத்திற்குள் விவாகரத்து? முற்றுப்புள்ளி வைத்த மகாலெட்சுமி - ரவீந்தர்!

திருமணமாகி ஒரே வருடத்திற்குள் விவாகரத்து? முற்றுப்புள்ளி வைத்த மகாலெட்சுமி - ரவீந்தர்!

மனைவிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்தப் பிரச்சினைக்குக் காரணம். இனிமேல் கணவர் தன்னுடன் வாழவே முடியாது என்ற ரேஞ்சில் மனைவி எதையும் செய்யவில்லை. இதை எல்லாம் வைத்து அந்த நபர் மன ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார் என்று சொல்லிவிட முடியாது எனக் கூறி வழக்கை ரத்து செய்தனர்.