திருமணமாகி ஒரே வருடத்திற்குள் விவாகரத்து? முற்றுப்புள்ளி வைத்த மகாலெட்சுமி - ரவீந்தர்!
கணவரின் விரக்தி பதிவிற்கு பதிலடியாக புதிய பதிவு ஒன்றை மகாலெட்சுமி பகிர்ந்துள்ளார்.
மகாலெட்சுமி - ரவீந்தர்
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

சமீபத்தில் தான் தங்களின் 6-வது மாத திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இருவரும், கோவில், ஹோட்டல் என பொது இடங்களில் ஒன்றாக வலம் வருகின்றனர். அவ்வப்போது முன்னணி யூடியூப் ஊடகங்களிலும் பேட்டி அளித்து வருகின்றனர்.
விவாகரத்து?
அது குறித்த புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், ரவீந்தர் வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே, ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சோக பதிவொன்றை பகிர்ந்தார்.

அதனையடுத்து ரசிகர்கள் பிரிந்துவிட்டார்களா என குழப்பத்தில் கமெண்டுகளை அள்ளி வீசினர். தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக, மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, நீ என்னை சுற்றி கைகளை வைக்கும் போது இந்த உலகில் என்னால் முடியாதது எதுவுமே இல்லை.
நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன் அம்மு எனக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு ரவீந்தர், லவ் யூ பொண்டாட்டி என்று பதில் கொடுத்துள்ளார்.
சிறையில் இம்ரான் கான் மரணம் - வெடித்த சர்ச்சை...! போராட்டத்திற்கு தயாராகும் 20 லட்சம் பேர் IBC Tamil
சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ Manithan