திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா?
மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ்
'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அதன் பிறகு அவர் பெரிய அளவில் வேறு எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை.
பின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக வலம் வந்தார். இதற்கிடையில் தமிழ்நாட்டில் மிகவும் அறியப்பட்ட சமையல் கலைஞர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
2வது திருமணம்
பிரதமர் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலருக்கும் அவர்களது வீட்டு விசேஷங்களுக்கு சமைத்து மிகவும் பிரபலமானார். இவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றதாக தகவல் பரவியது.
Baby loading 2025🤰
— Joy Crizildaa (@joy_stylist) July 27, 2025
We are pregnant 🤰
6th month of pregnancy #madhampattyrangaraj #MrandMrsRangaraj #chefmadhampattyrangaraj pic.twitter.com/wA9s87AswJ
இந்நிலையில் 2வதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டனர். மேலும், ஜாய் கிரிஸில்டா, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.