இளையராஜா வீட்டு மருமகள் - வனிதா இப்படி சொல்ல காரணம் என்ன தெரியுமா?

Tamil Cinema Ilayaraaja Vanitha Vijaykumar
By Sumathi Jul 17, 2025 03:01 PM GMT
Report

இளையராஜா-வனிதா விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியுள்ளார்.

இளையராஜா-வனிதா

வனிதா விஜயகுமார் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

vanitha - ilayaraja

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சிவராத்திரி பாடல் தன்னுடையது. இதை நீக்க வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து பேசிய வனிதா, நான் அவர் வீட்டுக்கு மருமகளாக ஆக வேண்டியது,

அவரது மனைவி ஜீவா அவரின் வீட்டு நகைகள் அறை சாவியை என்னிடம் கொடுத்து சாமிக்கு பூஜை செய்ய சொன்னதாக கூறியுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், வனிதா நேரடியாக வீட்டுக்கு வந்து, இளையராஜாவிடம் அனுமதி வாங்கியதாகவும் சொல்கிறார்.

அப்போது அனுமதி தந்துவிட்டு, இப்போது வந்து கேஸ் போடுவது சரியில்லை. அதேபோல, இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போயிருக்க வேண்டியது என்று வனிதா சொல்வது, கார்த்திக் ராஜாவை நினைத்து இப்படி சொல்கிறாரா அல்லது வேறு யாரையாவது சொல்றாங்களா தெரியவில்லை.

மொய்ப் பணத்துக்காக பத்திரிக்கை? நடிகர் கிங்காங் வேதனை

மொய்ப் பணத்துக்காக பத்திரிக்கை? நடிகர் கிங்காங் வேதனை

உண்மை என்ன?

இளையராஜா வீட்டில், இளையராஜா மனைவி, ஜீவா இருக்கும்போது ஒவ்வொரு வருடமும் கொலு வைப்பார்கள். அந்த விழாவில், எஸ்பிபி, ஜானகியம்மா, சுசிலாம்மா, எல்ஆர் ஈஸ்வரி, எம்எஸ்வி உட்பட எல்லாருமே கலந்து கொள்வார்கள்.

இளையராஜா வீட்டு மருமகள் - வனிதா இப்படி சொல்ல காரணம் என்ன தெரியுமா? | Actress Vanitha Ilayaraja Issue Behind The Truth

இதற்காகவே பிரத்யேகமாக அழைப்பு விடுக்கப்படும். வந்திருக்கும் விருந்தாளிகள் அனைவருக்கும் கிஃப்ட் தருவார்கள். அப்படித்தான் 2 , 3 முறை வனிதா தரப்பினர் சென்றதுபோல தெரிகிறது. அப்போது ஜீவாம்மா சாவி தந்து, நகையை பீரோவில் வைக்க சொல்லியிருக்கிறார்.

மிகப்பெரிய நடிகை மஞ்சுளாவின் மகள் என்பதால், அந்த அபிமானத்தில் சொல்லியிருக்கலாம். ஜீவாம்மா காட்டிய பாசத்தை வைத்து, அந்த வீட்டுக்கு மருமகளாக போகலாம் என்று வனிதா நினைத்திருக்கலாம். தன்னுடைய மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மஞ்சுளா அப்போது உறுதியாக இருந்தார்.

அதன்படியே வனிதாவும் சினிமாவுக்குள் வந்துவிட்டார். எனவே, வனிதா இப்போது சொல்வதை உண்மை என்று சொல்ல முடியாது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதேசமயம், இப்போதுவரை வனிதா சொன்னதை எதிர்தரப்பிலிருந்து யாரும் மறுக்கவில்லை என்பதால் பொய் என்றும் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.