கேட்கும்போது கொடுத்துட்டு.. இப்போ கேஸ் போடுறீங்க - இளையராஜாவை சாடிய வனிதா
பாடல் சர்ச்சை குறித்து வனிதா விளக்கமளித்துள்ளார்.
இளையராஜா வழக்கு
நடிகை வனிதா கதை எழுதி, இயக்கி, நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி என்ற பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதனை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதற்காக தற்போது இளையராஜா குற்றசாட்டுடன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள வனிதா விஜயகுமார், இளையராஜா வீட்டில் நான் ஒரு பொண்ணு மாதிரி.
அவரிடம் தனிப்பட்ட முறையில் இந்த பாடலை பயன்படுத்துவது குறித்து பேசிவிட்டேன். இந்த பாடலை எக்கோ ரெக்கார்டிங் கம்பெனியில் இருந்துதான் சோனி மியூசிக் வாங்கினார்கள். சோனி ரெக்கார்டிங் கம்பெனி என் பெரியப்பாவுடையது. அந்த கம்பெனியில் இருந்து தான் பிரச்னை தொடங்கியது.
வனிதா காட்டம்
குடும்ப பிரச்னை அதிகம் இருக்கிறது, அதனால் தான் வேண்டுமென்றே அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தவறான ஒன்று. நான் நேரில் சென்று, அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, என் பொண்ணுடன் அவர் காலில் விழுந்துள்ளேன். அவரின் மகள் பவதாரணி எனக்கு உடன்பிறவா சகோதரி.
என் சொந்த அப்பாவையே கோர்ட் கேஸ் என்று சந்தித்துவிட்டேன். ஆனால் அவரை நான் தெய்வமாகத்தான் மதிக்கிறேன். அந்த குடும்பத்தில் ஒரு சம்பவம் நடந்தபோது அவர் பையன் நீ என்னை லவ் பண்றியா எங்க அப்பாவை லவ் பண்றீயா என்று கேட்டான் நான் உங்க அப்பாவைத்தான் லவ் பண்றேன் என்று சொன்னேன்.
இத்தனை வருடங்கள் நான் இதை யாரிடமும் சொன்னது இல்லை. உண்மையாக நீங்கள் தான் அந்த பாடலுக்கு ஓனர் என்றால், உண்மை என்ன என்று மைக் பிடித்து பதில் சொல்லுங்கள். என்ன உரிமை இருக்கிறது என்று மைக் பிடித்து பேசுங்கள். நான் உரிமையாக கேட்கும்போதே திட்டியிருக்கலாமே, இப்போ கேஸ் மட்டும் போடுறீங்களே என்று தெரிவித்துள்ளார்.