விஜய் மனைவியை பிரிந்துவிட்டாரா? குடும்ப நண்பர் முக்கிய தகவல்
விஜய்-சங்கீதா பிரிவு குறித்த வதந்திக்கு அவரது குடும்ப நண்பர் விளக்கமளித்துள்ளார்.
விஜய்-சங்கீதா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து விஜய், அரசியல் கட்சி தொடங்கி ஒரு அரசியல் தலைவராக வலம் வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இதற்கிடையில் தனது மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார், தற்போது சங்கீதா லண்டனில் உள்ளார் என்று கூறி வருகின்றனர். அதேபோல். கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு, விஜய் த்ரிஷாவுடன் தனி விமானத்தில் கோவா சென்றது உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர்களின் குடும்ப நண்பர் ஜெயந்தி கண்ணப்பன், விஜய் சுயமாக சிந்திக்கக்கூயவர். அவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். சங்கீதா ரொம்ப அமைதியாக அழகான குடும்ப தலைவி. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார்.
முக்கிய தகவல்
அவரால், அவரது மாமனார் மாமியார் என யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. விஜயின் சினிமா வாழ்க்கையில் கூட இப்படி செய்யுங்கள் என்று எந்த ஆலோசனையும் சொல்லமாட்டார். எனக்கு தெரிந்தவரை, அவர் அமைதியான ஒரு நபர். மிகவும் நெருக்கமானவர்களிடம் தான் அவர் அதிகம் பேசுவார்.
புகழ்பெற்ற ஒரு நடிகரின் மனைவி எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்கிறார். தற்போது தனது மகளின் படிப்புக்காக சங்கீதா வெளியூரில் இருக்கிறார். நிறைய தம்பதிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் வாழக்கையில் பிரிந்து போற தம்பதி இவர்கள் இல்லை. எந்த காலக்கட்டத்திலும் குழந்தைகளையும் மனைவியும் பிரிய வேண்டும் என்று விஜய் நினைக்கமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.