நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா
சீரியல் நடிகை அகிலா தனது படிப்பு, குடும்பம் குறித்து மனம் திறந்துள்ளார்.
சீரியல் நடிகை அகிலா
சின்னத்திரையில் பல முன்னணி சேனல்களின் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை அகிலா. மலர்கள், ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள்,
கல்யாண பரிசு, சக்தி, அழகு, முந்தாணை முடிச்சு,அஞ்சலி, அபூர்வ ராகங்கள், அருந்ததி, முள்ளும் மலரும் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். 40க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
தற்போது கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகியுள்ள அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சீரியலில் எனக்கு 27 வயதில் ஒரு பொண்ணு இருக்கா, அவள் பெயர் அஸ்வதி. மலர் சீரியலில், ஹீரோயின் அவள் தான். அவளும் எனக்கு நண்பர்களும் சேர்ந்து வளைகாப்பு செய்தார்கள்.
படிப்பு, குடும்பம்
எனது குடும்பம் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். அதை வெளியுலகில் யாரும் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. அதனால் தான் சமூகவலைதளங்களில் எனது குடும்பம் குறித்து எந்த பதிவும் வெளியிடவில்லை. அவர்களுக்கும் அது பிடிக்கவில்லை.
அதேசமயம், எனக்கு நடிப்பு வாழ்க்கையில் எனது குடும்பத்தினர் சாப்போர்ட் அதிகம். நான் மருத்துவ டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்பினேன். அப்போது என்னால் முடியவில்லை என்பதால் இப்போது அகாடமிக் டாக்டர் ஆக முயற்சித்து வருகிறேன். வேல்ஸ் யுனிவர்சிட்டில் பி.எச்.டி பண்றேன்.
எனது கணவர் எனக்கு எல்லா வகையிலும் சப்போர்ட்டாக இருக்கிறார். உங்க வீட்டில் டாக்டர் ஆக்க வேண்டும் என்று நினைத்தது நடக்கவில்லை. அதனால் நீ இப்படி டாக்டர் பட்டம் வாங்கிவிடு என்று சொல்லி அவர் தான் என்னை பி.எச்.டி படிக்க வைக்கிறார். கர்ப்பமாக இருந்தாலும், அவர் தான் என்னை அழைத்து சென்று மீண்டும் வீட்டுக்கு கூட்டி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.