இந்திய வீரரை சீண்டிய ஜிம்பாப்வே வீரர்.. காதலி தான் அதற்கு காரணம் - லூக் ஜோங்வே!
ஷூவை கழட்டி விக்கெட்டை கொண்டாடியது தொடர்பாக ஜிம்பாப்வே வீரர் லூக் ஜோங்வே விளக்கம் அளித்துள்ளார்.
லூக் ஜோங்வே
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இதற்கு நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் லூக் ஜோங்வே வீசிய 10 வது ஓவரில் இந்திய வீரர் துருவ் ஜுரேல் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது லூக் ஜோங்வே தனது ஷூவை கழற்றி காதில் வைத்து போன் பேசுவது போல் அந்த விக்கெட்டை கொண்டாடினார்.
காதலி சொன்னதால்..
அவர் ஷூவை அவிழ்த்தது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், யாரையும் அவமானப்படுத்துவதற்காக நான் அப்படி செய்யவில்லை என்று லூக் ஜாங்வே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், முதல் போட்டிக்கு முன் தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாகவும்,
அப்போது விக்கெட் வீழ்த்தினால் அதை எப்படி கொண்டாட வேண்டும் என இருவரும் விவாதித்ததாகவும், அப்போது விக்கெட்டை வீழ்த்தினால் ஷூவை அவிழ்த்து காதில் வைத்து போன் பேசுமாறு அவரது காதலி கூறியதாகவும் லூக் ஜாங்வே தெரிவித்துள்ளார்.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
