கடும் குளிரில் திருமணம்; காதலியின் ஆசையை நிறைவேறிய காதலன் - புது couplegoal!
பனிப் பிரதேசத்தில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
காதலியின் ஆசை
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் தற்போது மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் நிலவி வருகிறது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 15,000 அடி உயரத்தில் உள்ளது.
இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த அஜய் பன்யால் என்பவர் தனது காதலி யாரும் செல்லாத பகுதியில் சென்று திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
அந்த விருப்பத்தின் பேரில் இந்த இடத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார்.
குளிரில் திருமணம்
இதையடுத்து, மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் அலங்கார மேடை அமைத்து இந்து முறைப்படி இந்த காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். இதுபோன்று திருமணம் நடைபெற்றது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து, இமாசலப் பிரதேசத்தின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஜய் பன்யால், கடும் குளிரில் நடைபெற்ற திருமண வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதுபோன்றும் திருமணம் நடைபெறும். காதலர்களின் ஆசை நிறைவேறிய தருணம். காதலியின் விடாமுயற்சியால், குஜராத்தைச் சேர்ந்த காதலர்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் மைனஸ் 25 டிகிரி வெப்பநிலையிலும் திருமணம் செய்துகொண்டனர்.
இங்கு இதுபோன்று திருமணம் நடப்பது இதுவே முதல்முறை. ஸ்பிட்டி மாவட்டத்தின் மூராங் பகுதியில் நேற்று காலை இந்த அற்புதமான திருமணம் நடைபெற்றது. நெடுந்தூரம் பணித்து தனித்துவமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக ஸ்பிட்டி மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில்,பலரும் இதுபோல திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக தெரிவித்து வருகின்றனர்.